தேனி மாவட்டத்தில் சந்தைகளை இடமாற்ற ஆட்சியர் நடவடிக்கை :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் 2 வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சராசரியாக தினமும் 150-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஊராட்சிகளில் 64 கட்டுப்பாட்டுப் பகுதிகளும், நகராட்சிகளில் 31 கட்டுப்பாட்டுப் பகுதிகளும், பேரூராட்சிகளில் 30 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் கண்டறியப்பட்டுள்ளன. வாரச் சந்தைகளுக்கு வரும் கூட்டத்தை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஆட்சியர் கூறுகையில், பெரியகுளம் அருகே வடுகபட்டியில் ஞாயிறு, வியாழனில் செயல்பட்ட பூண்டுச் சந்தை இனி திங்கள், வியாழனுக்கு மாற்றப்படுகிறது. ஆண்டிபட்டி வாரச்சந்தையை இடமாற்ற இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. சின்னமனூர், தேனி உழவர் சந்தைகள் அந்தந்தப் பகுதி வேளாண் விற்பனை மையங்களுக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கம்பம் தினசரி சந்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்