திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 738 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதில், திருநெல்வேலி மாநகர பகுதிகளில் மட்டும் 396 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விவரம்:அம்பாசமுத்திரம்- 43, மானூர்-51, நாங்குநேரி- 21, பாளையங்கோட்டை- 74, பாப்பாகுடி- 13, ராதாபுரம்- 15, வள்ளியூர்- 65, சேரன்மகாதேவி- 37, களக்காடு- 23.
மானூரில் அரசு மருத்துவ ஆராய்ச்சி பிரிவில் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த வளாகம் மூடப்பட்டு,கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை நேற்றுமுதல் மேற்கொள்ளப்படுகிறது. காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
பாளையங்கோட்டை மகாராஜ நகரிலுள்ள உழவர் சந்தையில்நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 விவசாயிகளுக்கு தொற்றுஇருப்பது தெரியவந்தது. அவர்கள்தனிமைப்படுத்தப்பட்டனர். அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
மேலும், சந்தை இரண்டாக பிரிக்கப்பட்டு 60 கடைகள் வழக்கமான இடத்திலும், மீதமுள்ள 60 கடைகள் மகாராஜ நகர் ஸ்மார்ட் சிட்டி பூங்காவிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா பரவலின்போது இச்சந்தையிலுள்ள கடைகள் 3 ஆக பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் இதுவரை 20,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 1,447 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 237 பேருக்கு புதிதாக தொற்றுகண்டறியப்பட்டது. இருவர் உயிரிழந்தனர்.நாகர்கோவில், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல்உட்பட மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று சளி மாதிரிகளை சேகரித்து,கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்து தினமும் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் டோஸ்தடுப்பூசிகள் வரை வரவழைக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக 83,941 பேருக்குகரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்ட தடுப்பூசி 23,377 பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்த 41,400 பேருக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கரோனா தொற்றுகண்டறியப்பட்டது. இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 157 பேர் குணமடைந்தனர். இதுவரை 9 ஆயிரத்து 795 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையே கரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காததால் பொது சுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறையினர் நடத்திய சோதனையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.85 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 594 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,228ஆக அதிகரித்துள்ளது.மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 309 பேர்குணமடைந்து வீடு திரும்பியுள் ளனர். இதுவரை 18,997 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 3,079 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago