அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் மகாமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகே உள்ள காலி இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாக ரெட்டிப்பாளையம் கிராம பொதுமக்கள் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அண்மை யில் மனு அளித்திருந்தனர்.
மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மார்ச் 3-ம் தேதி ஆண்டி மடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது, வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், போராட்டத்தில் ஈடு பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி யதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, ஊர் பொதுமக்களில் சிலர் மீது, ஆக்கிரமிப்பு செய்து இருப் பதாக கூறப்படும் நபர் ஆண்டிமடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டிவரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ரெட்டிப்பாளையம் கிராம பொதுமக்கள் ஆண்டிமடம் காவல்நிலை யம் அருகே நேற்று உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் மற்றும் போலீஸார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து முன்னணியினர் மற்றும் ரெட்டிப்பாளையம் கிராம பொது மக்கள் 15 பெண்கள் உட்பட 39 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைத்து, மாலையில் விடுவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago