அரசுப்பள்ளி மாணவர்கள் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்டபோட்டித் தேர்வுகளில் பயிற்சிப் பெற ‘இன்னோவேட்டிவ் டீச்சர் டீம்’ என்ற குழுவை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.
தனியார் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளில் பயிற்சிப்பெற அப்பள்ளியின் சார்பில் சிறப்பு வகுப்புகள் நடத்தப் படுகின்றன. கட்டண அடிப்படையில் நடத்தப்படும் இது போன்ற பயிற்சி வகுப்புகளில் தனியார் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டு உயர் கல்வி பெறவும், போட்டித் தேர்வு மூலம் பல்வேறு உயர் படிப்புகளை தேர்வு செய்து படிக்கின்றனர்.
ஆனால், அரசுப்பள்ளி மாணவர் களுக்கு இது போன்ற பயிற்சிகள் பெறுவதில் பெரும் சிக்கல் நீடிக் கிறது. கட்டண அடிப்படையில் நடத்தப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிக்க அரசுப்பள்ளி மாண வர்களுக்கு போதிய வசதி இல்லா ததால் டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ‘நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வு களில் கலந்து கொண்டு வெற்றிபெற முடியாத நிலை உருவாகி யுள்ளது.
இந்நிலையை போக்க திருப்பத் தூர் மாவட்ட அரசுப்பள்ளி ஆசிரி யர்கள் ஒன்றிணைந்து ‘இன்னோ வேட்டிவ் டீச்சர் டீம்’ என்ற தனி குழு ஒன்றை தொடங்கியுள்ளனர். அரசுப்பள்ளி ஆசிரியர்களின் புதிய முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள இக்குழுவானது, அரசுப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர் களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி, ‘நீட்' பயிற்சி, டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கவுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் புதிதாக ஆரம்பித்த ‘இன்னோ வேட்டிவ் டீச்சர் டீமை’ திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தொடங்கி வைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இது குறித்து அரசுப்பள்ளி ஆசிரியர் அருண்குமார் கூறும் போது, ‘‘இக்குழு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் ஆன்லைன் மூலம் அளிக்கப்படவுள்ளன.
அதாவது, ஜூம் ஆப் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, ரோபோடிக்ஸ் பயிற்சி, ‘நீட்' பயிற்சி, டிஎன்பிஎஸ்சி பயிற்சி, யுபிஎஸ் பயிற்சி, செயற்கை நுண்ணறிவு, கணினி பயிற்சி, கரோனா தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
இப்பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. அரசுப்பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி விருப்பமுள்ள தனியார் பள்ளி மாணவர்களும் இப்பயிற்சி வகுப்பில் சேரலாம்.
இப்பயிற்சிகள் மூலம் மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ளலாம், கல்வி தரத்தையும் உயர்த்திக் கொள்ளலாம். தற்போது பள்ளிகள் இயங்காததால் ஆன்லைன் வாயிலாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகுபள்ளிகளில் நேரடி வகுப்பு மூலம் இப்பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆம்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர் களான சரவணன், ஜெயசீலன் உட்பட பலர் செய்து வருகின்றனர்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago