தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை, 25 கிலோ அரிசி வழங்க வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தி.மலை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலரும் சம்பளம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளிகள் இந்தாண்டும் தொடங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே, தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் உரிய சம்பளம் இல்லாமல் தவித்து வருவதால் அரசின் சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தனியார் பள்ளி ஆசிரி யர்கள் சார்பில் நேற்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், ‘‘தனியார் பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் நாங்கள் கரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் வேலையிழந்து ஊதியம் எதுவும் இல்லாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எந்தவிதமான அரசின் உதவியும் இல்லாமல் தவித்து வரும் எங்களுக்கு தெலங்கானா மாநிலத்தில் வழங்கப்பட்டுள்ளதைப் போல மாதம் ரூ.2 ஆயிரம் மற்றும் 25 கிலோ அரிசியும் அரசிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago