நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை - வேட்பாளர்கள், முகவர்களுடன் ஆட்சியர் ஆலோசனை :

By செய்திப்பிரிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் உதகையிலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஆட்சியர் பேசும்போது, "வேட்பாளர்கள் மற்றும் அரசியல்கட்சியின் முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கட்டாயம் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள், அறைகளின் நுழைவுவாயில்களில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கைப்பேசியை கொண்டுசெல்லக்கூடாது. முகவர்கள் தேவையின்றி ஒரு மேஜையிலிருந்து இன்னொரு மேஜைக்கோ அல்லது ஓர் அறையிலிருந்து மற்றொரு அறைக்கோ செல்லக்கூடாது.

வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், சம்பந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு சேமிப்பு கிடங்குக்கு ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் மின்னணு வாக்குப் பதிவுஇயந்திரங்கள் கொண்டு செல்லப்படும்போது வேட்பாளர்கள் மற்றும்அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உடன் செல்லலாம். வேட்பாளர்கள்மற்றும் அரசியல் கட்சியினர்கரோனா நோய் தொற்று வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து,மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"என்றார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, சார் ஆட்சியர்கள் மோனிகா ரானா,ரஞ்சித்சிங், கூடலூர் கோட்டாட்சி யர் ராஜ்குமார், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.பாலுசாமி உட்பட பலர் உடனிருந்தனர். உதகையிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா. உடன், காவல் கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், வருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்