பசுமை வளாகமாக மாறும் தேயிலைத் தொழிற்சாலைகள் :

By ஆர்.டி.சிவசங்கர்

சூழலியல் பாதுகாப்பின் முன் மாதிரியாக, நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகள் பசுமைத் தொழிற்சாலைகளாக உருமாறியுள்ளன.

நாட்டின் மிகப்பெரிய தேயிலைதொழில் கூட்டுறவு அமைப்பான ‘இன்ட்கோசர்வ்’-ல், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.தேயிலைத் தூள் உற்பத்தி செய்ய அதிகளவு மரங்கள் விறகாகஎரிக்கப்படுகின்றன.

இதனால் மலைப்பகுதியின் பாரம்பரிய மரங்களும், புற்கள் இனங்களும் அழிந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில், தமிழக அரசு தேயிலைத் தோட்டங்கள் வனங்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக, ‘இன்ட்கோசர்வ்’ கட்டுப்பாட்டில் இயங்கும் கட்டபெட்டு மற்றும்மகாலிங்காஆகிய தேயிலைத்தொழிற்சாலைகள் மற்றும் அதன் வளாகத்தை பசுமையாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. கட்டபெட்டு ஆலை வளாகத்தில்இயற்கை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியிலிருந்து கற்களால் செதுக்கப்பட்ட வன விலங்குகளின் உருவங்கள் கொண்டு வரப்பட்டு, அதனை வண்ணம் தீட்டி காட்சிப்படுத்தியுள்ளனர். சிறுத்தை, கரடி, மான் மற்றும் பறவை இனங்களின் உருவங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புது முயற்சி குறித்து ‘இன்ட்கோசர்வ்’ தலைமை நிர்வாக அதிகாரி சுப்ரியா சாஹு கூறும்போது, ‘‘தேயிலைத் தூள் தயாரிக்கஅதிகளவு மரங்களை எரிக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து வெளியேறும் புகையும், சாம்பலும் அருகில்உள்ள நீரோடைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது. இதனை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முதல் முயற்சியாகத் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், கட்டபெட்டுமற்றும் மாகாலிங்கா தொழிற்சாலைவளாகங்களில் ஆக்கிரமித்துள்ள களைத் தாவரங்களை அகற்றிவிட்டு, நீலகிரி மலைப்பகுதியின் பூர்வீக மரங்களை நடவு செய்கிறோம். இதோடு பூர்வீக புல் வகைகளையும் நட்டுள்ளோம். இந்தபகுதியில் காணப்படும் பறவைகளை ஓவியமாக வரைந்துள்ளோம். இதன் மூலமாக சூழலியல் சார்ந்தநேர்மறை மாற்றங்களை முன்னெடுத்து வருகிறோம்’’ என்றார்.கட்டபெட்டு தேயிலை தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வன உயிரினங்களின் கற்சிற்பங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்