‘கூடுதல் ஆக்சிஜன் டேங்க் வசதி’ :

By செய்திப்பிரிவு

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரிமருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களுக்கென, மூன்று இடங்களில் தனித்தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேவைப் படும்போது பயன்படுத்த, ஏற்கெனவே 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் உள்ளது.

கரோனா பாதித்தவர்களுக் கும் தேவைக்கேற்ப ஆக்சிஜன் இருப்பு உள்ளது. கூடுதலாகதொற்று பாதித்தவர்கள் அனுமதிக்கப்படும்போது, நிலைமையை சமாளிக்க தற்போது 6,000 லிட்டர் திரவஆக்சிஜன் டேங்க் தருவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை. தேவையைவிட கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நோயாளிகள் வந்தாலும் உயிர் காக்க முடியும் என மருத்துவக் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்