வீட்டுமனை வாங்குவதற்காக தவணை முறையில் பணம் கட்டிஏமாந்தவர்கள் அது தொடர்பாக உரிய ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் கலம்பேடு கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்தப் புகாரில், "காஞ்சிபுரம், செங்கழுநீரோடை பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பூக்கடை சத்திரம் பகுதியில் வாஸ்துபகவான் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் அலுவலகம் ஒன்றை நடத்தி வந்தார். அதில் மாதம் ரூ.1000 வீதம் 65 மாதங்களுக்கு பணம் கட்டினால் 1100சதுர அடி கொண்ட வீட்டுமனை தருவதாக உறுதி அளித்து ஒப்பந்தப் பத்திரம் வழங்கினார். இதேபோல் ரூ.8 லட்சத்துக்கு மேல் வசூல் செய்துவிட்டு வீட்டுமனை தராமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி வாஸ்துபகவான் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் வீட்டுமனைக்காக பணம் கட்டி ஏமாற்றம் அடைந்தவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago