கே.வி.குப்பம் தொகுதிக்கு புதிய தேர்தல் நடத்தும் அலுவலர்? :

By செய்திப்பிரிவு

கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கரோனா தொற்றால் புதிய தேர்தல் அலுவலரை நியமிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பரிந்துரை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

இதற்கான பயிற்சி வகுப்புகள் முடிந்தநிலையில் இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கே.வி.குப்பம் சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான பானுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சையில் உள்ள அவரால் வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கே.வி.குப்பம் தொகுதிக்கு புதிய தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிக்க தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் வேலூர் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம் பரிந்துரை கடிதம் அனுப்பியுஉளார்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கே.வி.குப்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மீண்டும் பணிக்கு திரும்ப 14 நாட்கள் ஆகும்.

எனவே, வேலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் காமராஜ் என்பவரை புதிய தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார். இதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும்’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்