சிவகங்கை மாவட்டத்தில் வாக்குகளை எண்ண தொகுதிக்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டன.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பி.மதுசூதன்ரெட்டி பேசியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகள் உள்ளன.
மே 2 காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், காலை 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். தபால் வாக்குகளை பொறுத்தவரை காரைக்குடிக்கு 3 மேசைகள், மற்ற தொகுதிகளுக்கு தலா 4 மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள வாக்குகளை எண்ண 4 தொகுதிகளிலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
காரைக்குடி தொகுதிக்கு 443 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 32 சுற்றுகளும், திருப்பத்தூர் தொகுதிக்கு 410 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 30 சுற்றுகளும், சிவகங்கை தொகுதிக்கு 427 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 31 சுற்றுகளும், மானாமதுரை தொகுதிக்கு 399 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதால் 29 சுற்றுகளும் எண்ணப்படும்.
ஒவ்வொரு மேஜைக்கும் தலா ஒரு கண்காணிப்பாளார், உதவி கண்காணிப்பாளர், ஒரு மைக்ரோ அப்சா்வர் இருப்பர். 4 தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை பணியில் 500-க்கு மேற்பட்ட பணியாளா்கள் ஈடுபட உள்ளனர், என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலா் லதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முத்துகழுவன் (சிவகங்கை), சுரேந்திரன் (காரைக்குடி), சிந்து (திருப்பத்தூர்), தனலெட்சுமி (மானாமதுரை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago