வாக்கு எண்ணும் பணிக்கு வரும் ஊழியர்கள், முகவர்களுக்கு கரோனா தடுப்பூசி :

By செய்திப்பிரிவு

தென்காசி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு வரும் ஊழியர்கள், முகவர்களுக்கு தடுப்பூசி, கரோனா பரிசோதனைப் பணி தொடங்கியது.

தென்காசி மாவட்டத்தில் உள்ளசங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் பணி வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது. தென்காசி மாவட்டத்தில் உள்ள5 சட்டப்பேரவைத் தொகுதிகளில்போட்டியிட்ட வேட்பாளர்கள்வாக்கு எண்ணிக்கைக்கு தங்களால்நியமிக்கப்பட்ட முகவர்கள் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் 10 சதவீதம் கூடுதலானஎண்ணிக்கையில் முகவர்கள் பட்டியலை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. தென்காசி மாவட்டத்தில்வேட்பாளர்களின் முகவர்கள் சுமார்1,400 பேர்வாக்கு எண்ணும் மையத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடவும், 45 வயதுக்குமேற்பட்ட முகவர்களுக்கு தடுப்பூசிபோடவும், 45 வயதுக்கு உட்பட்ட முகவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, நேற்று தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி போடும்பணி மற்றும் கரோனா பரிசோதனைப் பணி தொடங்கியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE