நெல்லையில் 2 பேர், குமரியில் 3 பேர் கரோனாவால் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 826 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவுக்கு இருவர் நேற்று உயிரிழந்தனர்.

மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தொடங்கியதில் இருந்து பாதிப்புஎண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 500 என்ற அளவில் இருந்தது.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 826 பேருக்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் மட்டும்413 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:

அம்பாசமுத்திரம், மானூர்- தலா 48, நாங்குநேரி- 28, பாளையங்கோட்டை- 113, பாப்பாக்குடி- 16, ராதாபுரம்- 47, வள்ளியூர்- 68, சேரன்மகாதேவி- 28, களக்காடு- 17. கரோனாவால் பாதிக்கப்பட்ட இருவர் நேற்று உயிரிழந்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 33 ஆயிரத்து 512 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 1700 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், குருவிகுளம் ஒன்றியத்தில் 36 பேர், தென்காசி ஒன்றியத்தில் 18 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 17 பேர், கீழப்பாவூர் ஒன்றியத்தில் 16 பேர், ஆலங்குளம் ஒன்றியத்தில் 15 பேர், செங்கோட்டை ஒன்றியத்தில் 15 பேர், கடைய நல்லூர் ஒன்றியத்தில் 4 பேர், கடையம் ஒன்றியத்தில் 3 பேர், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 2 பேர், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 2 பேர் என 128 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 281 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 156 பேர் உட்பட இதுவரை9 ஆயிரத்து 638 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே கரோனாதடுப்பு விதிகளை கடைபிடிக்காததால் பொதுசுகாதாரத் துறை, காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறையினர் நடத்திய சோதனையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ரூ.61,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை 55 லட்சத்து22 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம்வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 230 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,629. நேற்று ஒரே நாளில் 361 பேர் உட்பட 18,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பல்வேறு மருத்துவமனைகளில் 2,790 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 156 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். தற்போது 1,849 பேர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் மரணமடைந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE