புதுகையில் மாணவியைக் கொன்று நகைகள் கொள்ளை :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டையில் கல்லூரி மாணவியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

புதுக்கோட்டை அசோக் நகர் அருகே உள்ள பொன்நகரைச் சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி சிவகாமி. மின்வாரிய ஊழியர். இவரது மகள் லோகபிரியா(20). இவர், புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ படித்து வந்தார்.

இந்நிலையில், சிவகாமி நேற்று வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் லோகபிரியா குத்திக் கொலை செய்யப்பட்டு, சடலமாக கிடந்துள்ளார். வீட்டில் இருந்த 30 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஸ்கூட்டரையும் காணவில்லை.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகாமி அளித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்