திருப்பத்தூர் மாவட்டத்தில் விதிமீறி செயல்பட்ட உணவகங் களுக்கு நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அறிவுறுத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் 26-ம் தேதி முதல் அரசு அறிவித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்க மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார்.
நகராட்சி அலுவலர்கள் ரோந்து
இந்நிலையில், நகராட்சி பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நகராட்சி அலுவலர்கள் கடந்த 2 நாட்களாக ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும், அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை என்ற அரசு உத்தரவை மீறி 10-க்கும் மேற்பட்ட உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர வைத்தும், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இயங்கி வந்த 15 உணவகங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.1.50 லட்சம் அபராதத்தை நகராட்சி அதிகாரிகள் வசூலித்தனர்.அதேபோல, சாலையோரம் இருந்த கடைகள், வணிக நிறுவனங்கள், காய்கறி மார்க்கெட், பஜார் பகுதிகளில் செயல்பட்ட கடைகளில் கரோனா விதிமுறை களை கடைபிடிக்காமல் இருந்த வியாபாரிகளிடம் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதத் தொகையை நகராட்சி அதிகாரிகள் வசூலித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago