வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு மட்டுமே நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் அவசியம் இல்லாமல் நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு வரவழைக்க வேண்டாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று 441 பேருக்கு தொற்று உறுதியானது. கடந்த 5 நாட்களாக மாவட்டத்தில் கரோனா தொற்று சராசரியாக 300 பேராக இருந்து வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா வார்டு படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதே நிலை தொடர்ந்தால், மருத்துவ மனைகளில் படுக்கைகள் போது மான அளவுக்கு இருக்காது என கூறப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ‘‘வேலூர் மாவட்டத்தில் தொற்று எண் ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வரும் நாட்களில் எவ்வளவு எண்ணிக்கை கூடும் என்பதை கவனிக்க வேண்டியுள்ளது. மாவட்டத்தில் போதிய அளவுக்கு கரோனா படுக்கை வசதிகள் இருப்பதால் இப்போதைக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் அதிகம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் படுகின்றனர்.
எனவே, புதிய நோயாளிகள் மற்றும் பரிசோதனைக்கு அவசியம் இல்லாமல் யாரையும் மருத்துவ மனைக்கு வரவழைக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை இருந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனு மதிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அதேபோல், தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிளையும் அதிகரிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago