சாலை வரியை ரத்து செய்ய : சுற்றுலா வாகன ஓட்டிகள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தூரத்தைவிட ஆட்டோக்களை இயக்குவது, சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்குவது, இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவது போன்ற பல்வேறு காரணங்களால் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

இதை தடுக்கக் கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவிடம் சுற்றுலா வாகன ஓட்டிகள் அளித்த மனுவில், ‘‘கரோனா பேரிடர் காலம் தொடங்கி, இன்றுவரை நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், ‘மேக்சி கேப்’ வாகனங்கள் இயக்கப்படாத நிலையில், சுற்றுலா வாகனங்களுக்கான காலாண்டு வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அது மட்டுமின்றி சாலை வரி, வாகனங்களுக்கான நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள மாதத் தவணைகளை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், சுற்றுலாவை நம்பி நாங்கள் உள்ளோம். எங்களது முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு தெரிவித்து, எங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் வாகனங்களின் ஆவணங்களை அரசிடம் ஒப்படைப்போம்’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்