காஞ்சிபுரம் மாவட்டத்தில் - முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்கக் கோரி மனு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முடிதிருத்தும் நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ சமூகநல சங்கம் மற்றும் முடிதிருத்துவோர் தொழிலாளர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சிறப்புத் தலைவர் என்.ராஜா, மாவட்டத் தலைவர் எஸ்.ஏழுமலை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவின் விவரம்:

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சலூன் கடைகள் அடைக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் கரோனா பரவலின்போது 6 மாதங்கள் சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

அந்த பொருளாதார நெருக்கடியில் இருந்தே மீண்டு வர முடியாத நிலையில் தற்போது மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்ற அறிவிப்பு அதிர்ச்சியையும், பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தொற்று பரவாதபடி பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை நாங்கள் கடைபிடிப்போம்.

எனவே, இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்