தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம், பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால், அனைத்துப் பகுதிகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து இருந்தது. இருப்பினும், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 1,238 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் சிறப்பு மருத்துவ முகாமும் நடைபெற்றது.
சுகாதாரத் துறையினர் கூறும்போது, "தற்போது மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். ஊரடங்கு இருந்தாலும், அரசு மருத்துவமனை, சுகாதார நிலையம் நாடி வரும் மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பக்கூடாது என்பதற்காக, தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 2 தவணையாக 2,16,761 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago