கரோனா பரிசோதனை என்ற பெயரில் பெரும்பான்மையான முகவர்களுக்கு கரோனா உள்ளது என்று நிராகரித்துவிட்டு அலுவலர்கள் அரசுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்பு இருப்பதால் அனைத்து முகவர்களையும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும் அனுமதிக்காவிட்டால் வாக்கு எண்ணும் மையத்தின் வாசலிலேயே போராட்டம் நடத்த உள்ளதாகவும் புதிய தலைமுறை மக்கள் கட்சி வேட்பாளர் மு.மேகநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவின் விவரம்:
வரும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு, வாக்கு எண்ணும் மையத்துக்கு உள்ளே செல்ல கரோனா பரிசோதனை அவசியம் என்பது தனிமனித உரிமைக்கு எதிரானது. கரோனா பரிசோதனை செய்வதும், தடுப்பூசி போடுவதும் அவரவர் விருப்பம். கரோனா பரிசோதனை என்ற பெயரில் சில முகவர்களை நிராகரித்துவிட்டு ஆளும் அரசுக்கு ஆதரவாக அலுவலர்கள் செயல்பட வாய்ப்புள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கரோனா பரிசோதனை செய்து கொள்ளட்டும். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் கரோனா பரிசோதனை செய்து கொள்ளப்போவதில்லை. தடுப்பூசியும் போட்டுக் கொள்ள மாட்டேன். காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளரான என்னை வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்காவிட்டால் மையத்தின் வாயிலில் எனது ஆதரவாளர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago