மரக்காணம் அருகே ராதா ருக்மணி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
மரக்காணம் அருகே ஓமிப்பேர் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி கோயிலில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வாஸ்து சாந்தி, திருவாரணம், அஷ்டபந்தனம் நடைபெற்றது. நேற்று காலை 6 .30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு மகா அபிஷேகமும்,
காலை 9.30 மணிக்கு விஸ்வரூப ஆஞ்சநேயர், விநாயகர், முருகர், நாகராஜர், காலபைரவர், ராமானுஜர் ஆகிய சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து 10 மணிக்கு மூலவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது பின்னர் மகா தீபாராதனையும், தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10.மணிக்கு சாமி வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago