ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்றால் நேற்று 515 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந் நிலையில் கரோனா பரிசோதனை மேற்கொள்வதிலும், தடுப்பூசி போடுவதிலும் மாவட்ட நிர்வாகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாதொற்று வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் கரோனா பரவல், படுக்கை வசதிகள் இருப்பு, கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, எவ்வ ளவு பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது, எவ்வளவு பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கைஅளிக்கப்பட்டு வருகிறது.
பரிசோதனை உயரவில்லை
இந்த புள்ளிவிபரத்தில் உள்ள தகவலின்படி, கடந்த 23-ம் தேதி 3194 பேருக்கும், 24-ம் தேதி 3165 பேருக்கும், 25-ம் தேதி 5060 பேருக்கும், 26-ம் தேதி (நேற்று) 2203 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரைவெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் வெளியிடப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டத்தில் தொடர்ச்சியாக கரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட அளவில் பரிசோதனையின் வேகம் குறைவாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நேற்று முன் தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 24-ம் தேதி வரை ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 953 கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 25-ம் தேதி வரை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 282 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாளில் வெறும் 329 பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டதா அல்லது ஞாயிறு ஊரடக்கினால் எண்ணிக்கை குறைந்ததா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட நிர்வாக தகவலின்படி, கடந்த 22-ம் தேதியில் இருந்து நாள்தோறும் 2180 பேர், 3752 பேர், 4176 பேர் என தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஈரோட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடுவதில் மாவட்ட நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்றைய பாதிப்பு
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று 515 பேர் கரோனாதொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் உள்ளோரில் 239 பேர் குண மடைந்துள்ளனர்.பெருந்துறை அரசு மருத்துவமனை யில் கடந்த 21ம் தேதி கரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்ட 65 வயது ஆண் மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனையில் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 156 ஆக உயர்ந்துள் ளது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago