இருதரப்பு மோதலில் 7 பேர் காயம்: 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

கரூர் அருகேயுள்ள ஆத்தூர் பிரிவு மருத்துவர் நகரைச் சேர்ந்தவர் ம.ஆறுமுகம் (45). இவரது மகன் பால்ராஜ். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் த.ஆறுமுகம்(42). இவரது மகன் ஜடேஜா என்கிற மணி. ஏப்.24-ம் தேதி பால்ராஜ் ஒட்டி வந்த இரு சக்கர வாகனம் மணி மீது மோதியது. இதையடுத்து, அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அதன்பின்னர், பால்ராஜ் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால், த.ஆறுமுகம், அவரது மனைவி கற்பகம், அவர்களது மகன்கள் ஜான்டிரோட்ஸ் என்கிற மாரி, ஜடேஜா என்கிற மணி, விக்னேஷ் (27), அஸ்வின் (21), ஜெகதீஷ்குமார் (24), சூர்யா (21) மற்றொரு சூர்யா (20), ஜீவா (21) உள்ளிட்டோர் பால்ராஜ் வீட்டு முன் திரண்டனர். தொடர்ந்து, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.ஆறுமுகம், த.ஆறுமுகம், மணி, தர்மா (29), அவரது தாய் பழனியம்மாள் (45), நாகம்மாள் (55), சுதா (42) ஆகிய 7 பேர் காயமடைந்து கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கரூர் நகர போலீஸில் ம.ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், 6 பிரிவுகளின் கீழ் த.ஆறுமுகம் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விக்னேஷ், அஸ்வின், ஜெகதீஷ்குமார், சூர்யா, மற்றொரு சூர்யா, ஜீவா ஆகிய 6 பேரை கைது செய்தனர். த.ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், ம.ஆறுமுகம், பால்ராஜ், சந்துரு, உறவினர் அஜித் உள்ளிட்ட 7 பேர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்