கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல்லை எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்யக் கோரி இ

ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட லட்சக்கணக்கான நெல் மூட்டைகள், கிடங்குகளுக்கு எடுத்துச் செல்லாமல் அப்படியே மாதக்கணக்கில் ஆங்காங்கே மழையிலும், வெயிலிலும் கிடந்து வீணாகின்றன. பன்றி, ஆடு, மாடுகள் அவ்வபோது நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லை தின்பதால் அதிகளவு சேதங்கள் ஆகின்றன. எனவே, தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கிடங்குகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் உலகநாதன், மாவட்ட துணைச் செயலாளர் தண்டபாணி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் தெய்வசிகாமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE