புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேர வைத் தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட உள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள், வேட்பாளர்கள், முகவர்கள், காவல் துறையினர் போன்றோருக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறும், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.
இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலு வலர் அலுவலகங்களிலும் கரோனா தடுப்புசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில், அலுவலர்கள் அதிக எண் ணிக்கையில் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago