புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் குழந்தைகள் நலப்பிரிவின் கீழ் உணர்ச்சிகள் ஒருங் கிணைப்பு மற்றும் நரம்பியல் மேம்பாட்டு பிரிவு அண்மையில் திறக்கப்பட்டது.
இதை, மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசியது: இம்மையத்தில் பிரத்யேக மருத்துவர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மூளை வாதம், ஆட்டிசம், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இயன்முறைப் பயிற்சி, பேச்சுப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு, தனியாரிடம் மாதத்துக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை செலவாகும்.ஆனால், இங்கு இலவ சமாகவே அளிக்கப்படுகிறது. தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில் இத்தகைய குறைபாடுகளுடையோர் இங்கு சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகின்றனர். மேலும், மருத்துவக் கல்லூரியின் கீழ் இயங்கும் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு இங்கு பிறவிக் குறைபாடு, செவித்திறன் குறைபாடுகள் குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.
இந்நிகழ்ச்சியில், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜ்மோகன், இருக்கை மருத்துவர் இந்திராணி, குழந்தைகள் மருத்துவர் இங்கர்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago