கரூரில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 1,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் ஆட்சியர் பிரசாந்த மு. வடநேரே தகவல் :

கரூர் தளவாபாளையம் எம்.குமார சாமி பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி 1,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என ஆட்சியர் பிரசாந்த மு.வட நேரே தெரிவித்தார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலு வலரும், ஆட்சியருமான பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

ஆட்சியர் பேசியது: வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பில் சுழற்சி முறையில் 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிசிடிவி கண்காணிப்பிலும் வாக்கு எண்ணும் மையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணும் நாளன்று 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு எண்ணும் நாளான மே 2-ம் தேதி, வாக்கு எண் ணும் மையத்துக்குள் வரும் அனை வரும கரோனா வழி காட்டு நெறிமுறைகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில், மாவட்ட எஸ்.பி சசாங் சாய், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், நில மெடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் (குளித்தலை) ஷே.ஷேக் அப்துல்ரகுமான், (கரூர்) என்.எஸ்.பாலசுப்பிரமணியன், (அரவக் குறிச்சி) தவச்செல்வம், (கிருஷ்ணராயபுரம்) தட்சிணாமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE