தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரேநாளில் 503 பேருக்கு கரோனா - தென்காசி, குமரியில் தலா 2 பேர், நெல்லையில் ஒருவர் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

தென்காசி, குமரி மாவட்டங்களில் 4 பேர், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 812 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று 1,600 பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், தென்காசி ஒன்றியத்தில் 49 பேர், சங்கரன்கோவில் ஒன்றியத்தில் 28 பேர், கீழப்பாவூர் ஒன்றியத்தில் 27 பேர், ஆலங்குளம் ஒன்றியத்தில் 20 பேர், வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 18 பேர், குருவிகுளம் ஒன்றியத்தில் 33 பேர், கடையநல்லூர் ஒன்றியத்தில் 20 பேர், மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் 12 பேர், செங்கோட்டை ஒன்றியத்தில் 24 பேர் என 246 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 156 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 149 பேர் உட்பட இதுவரை 9 ஆயிரத்து 482 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா பாதிப்பால் நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இம்மாவட்டத்தில் மொத்த உயிரிழப்பு 174 ஆக உயந்துள்ளது. தற்போது 1,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 436 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று 255 பேர் உட்பட இதுவரை 17 ஆயிரத்து 854 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 654 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார். இதுவரை மொத்த உயிரிழப்பு 230 ஆக உயர்ந்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 503 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,390 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 409 பேர் உட்பட இதுவரை 18,327 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். பல்வேறு மருத்துவமனைகளில் 2,812 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மட்டும் 227 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. 2 பேர் உயிரிழந்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 400 பேருக்கும் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 1,350 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆயுர்வேத மருத்துவத்தில் கரோனா தொற்றுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் முறை நேற்று தொடங்கியது. நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கு கரோனா உறுதியானதைத் தொடர்ந்து தபால் நிலையம் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள வங்கியின் மேலாளருக்கு கரோனா உறுதியானதால், வங்கி மூடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்