தி.மலையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி - நியாய விலை கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மண்டல இணை பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தி.மலை மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தகுதி உள்ள விற்பனையாளர்களுக்கு தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் வழங்கிய பிறகு புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால் ரேஷன் கடைகளில் விரல் ரேகை முறையை ரத்து செய்து கண் விழித்திறன் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 சதவீதம் பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து கொண்டு வரப்படும் அரிசியை தரமாகவும் மற்றும் சரியான எடையில் ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணியாளர்களுக்கு பணிவரன் முறையை ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார். கள்ளக் குறிச்சி மாவட்டப் பொருளாளர் தன்ராஜ் உரையாற்றினார். இதில், நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்