திருவண்ணாமலை மாவட்டத்தில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சேரந்தாங்கல் கிராமத்தில் 8 பேரும், செங்கம் மில்லத் நகரில் ஒரே குடும்பத்தில் 5 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து, அந்த பகுதிகளில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யவும், காய்ச்சல் முகாம்களை நடத்தவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர், அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூருக்கு சென்ற தனியார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அவர், கரோனா விதிமுறைகளை கடை பிடிக்காத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அறி வுறுத்தினார். இதையடுத்து அவர், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று, துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறும்போது, “திருவண்ணா மலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 1,500 பரிசோ தனைகள் செய்யப்பட்ட நிலையில், தற்போது தினசரி 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல், புதிய பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட்டு, படுக்கை வசதிகளும் 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆயூஷ் மருத்துவ மனையில் சித்த மருத்துவ முறையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செங்கம் மற்றும் காட்டாம்பூண்டி சுகாதார வட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. 54 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. கரோனா தொற்று குறைவதற்கு பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக் கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 20 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது தினசரி 300 முதல் 350 பேர் பாதிக்கப்படுவதால், தேவை இல்லாமல் மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவர்கள், பிராணவாயு, மருத்துவமனைகள் மற்றும் பராமரிப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago