ராணிப்பேட்டை மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய இன்றும், நாளையும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ராணிப் பேட்டை மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் கரோனா பரவலை தடுக்க நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே, வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட அனைவரும் அன்று முழுவதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அணியாதவர்கள் யாரும் மையத்துக்குள் அனுமதிக் கப்பட மாட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியில் ஈடுபட உள்ள அனைத்து அலுவலர்கள், ஊழியர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்.

இதற்காக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (27-ம் தேதி) மற்றும் நாளை (28-ம் தேதி) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் பரிசோதனை செய்துகொண்டு சான்று பெற வேண்டும். அல்லது அனைவரும் ஒரு டோஸ் கரோனா தொற்றுதடுப்பு ஊசியாவது போட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்