வேலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாளில் - கரோனா பாதிப்பு இரண்டரை மடங்காக உயர்வு :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்காக அதிகரித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக 300-ஐ கடந்த கரோனா தொற்று நேற்று 198-ஆக இருந்தது. தொடரும் கரோனா தொற்றை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று பரவல் அதிகமாகவே உள்ளது. கரோனா பாதித்தவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, விஐடி பல்கலைக் கழகத்தில் உள்ள கோவிட் நல மையத்தில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளித்து வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த 17-ம் தேதி வரை 22,961 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். 809 பேர் சிகிச்சையில் இருந்தனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 361-ஆக இருந்தது. கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 367 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 25 ஆயிரத்து 100-ஆக உயர்ந்துள்ளது. 2,190 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 374-ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 9 நாட்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை இரண்டரை மடங்காக உயர்ந் துள்ளது. இதில், 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்