கடலூர், பண்ருட்டியில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வளாகங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பண்ருட்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாத்து வைக் கப்பட்டுள்ளன. இந்த அறைகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் கண்காணிக்கப்படுவதை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் முழு ஊரடங்கு கடைபி டிக்கப்படுகிறதா என பண்ருட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை வீதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கினை கடைபிடிக்காத தனிநபர் மற்றும் கடைகள் நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இதை தொடர்ந்து கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்ட மன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்ற டுக்கு பாதுகாப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் கல்லூரி வளாகங்கள் கண்காணிக் கப்படுவதை ஆய்வு செய்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago