கடலூர் மாவட்டத்தில் நேற்று 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று203 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம்நேற்று வரை 17,480 பேருக்கு தொற்று ஏற்பட்டு 16,220 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,142 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இருவர் உயிரிழந்தது உட்பட 118பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே உளுந்தூர் பேட்டையைச் சேர்ந்த ஒருவர், விழுப்புரம் அருகே கப்பூர் துணைமின் நிலையத்தில் இளநிலைமின்வாரிய பொறியாளராக பணி புரிந்து வந்தார். திருமணமாகாத இவருக்கு கரோனா தொற்றுஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அவரது உடல் சென்னையிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு கொண்டுவரப் பட்டு கரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி அடக்கம் செய்யப் பட்டது. இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை 11,970 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 11,254 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 608 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 108 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று 218 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 28,932 பேருக்கு தொற்று ஏற்பட்டு, நேற்று 190 பேர் உட்பட 27,104 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 315 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago