வேலூர் மாவட்டத்தில் பெண்கள் உதவி மைய காவலர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் மடிக்கணினிகளை டிஐஜி காமினி வழங்கினார்.
மத்திய அரசின் நிர்பயா நிதியின் மூலம் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 181 மற்றும் 1098 மையங்கள் மூலமாக அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அல்லது மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெறப்படும் அனைத்து புகார்கள் மீது உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள்.
அதன்படி, வேலூர் மாவட் டத்தில் 15 முக்கிய காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் தொடங்கப்பட்டு பெண்கள் காவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கு இரு சக்கர வாகனத்துடன் மடிக்கணினி யும் நேற்று முன்தினம் வழங்கப் பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச் சியில் பெண் காவலர்களுக்கான வாகன சாவி மற்றும் மடிக் கணினியை டிஐஜி காமினி வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார், கூடுதல் காவல் கண்காணிப் பாளர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இவர்களின் செயல்பாடுகள் குறித்து மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்வார் என்றும் இவர்களுக்கு வரப்பெற்ற புகார்கள் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மடிக்கணினி வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago