தி.மலை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தி.மலை மாவட்டத்தில் 30 மணி நேர ஊரடங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொடங்கி இன்று காலை அதிகாலை 4 மணியுடன்நிறைவு பெற்றது. பணிமனை களுக்கு அரசுப் பேருந்துகளும், பாதுகாப்பான காலி இடங்களுக்கு தனியார் பேருந்துகளும் கொண்டு செல்லப்பட்டன.
பேருந்துகள் இயங்காததால் திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட பேருந்து நிலையங்கள் வெறிச் சோடின.
இதேபோல், ஆட்டோக்கள், வாடகை கார்கள், வேன்கள் மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் இயங்காததால், சாலைகள் வெறிச்சோடின.
மேலும், வணிக வளாகங்கள், மளிகை மற்றும் காய்கறி கடைகள்,திரையரங்குகள், உரக்கடைகள், பாத்திரக் கடைகள், நகைக்கடை கள், உணவகங்கள், பூக்கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மூடப் பட்டன. செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப் பட்டாலும், சரக்கு வாகனங்கள் மூலமாக இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டது. மருந்து கடைகள், மருத்துவமனைகள், பால் விற்பனை மையங்கள் போன்றவை தடையின்றி இயங்கியது.
முழு ஊரடங்கு அமலில் இருக்கும்போது வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இந்த அறிவுரையை ஏற்று 80 சதவீத மக்கள் செயல்பட்டுள்ளனர். 20 சதவீத மக்கள், தங்களது வழக்கமான பணியாக வெளியே சுற்றி வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். ஒரு சில இடங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மருத்துவ சேவைக்கு சென்றவர்கள் மற்றும் பால் விற்பனை செய்பவர்களை அடையாளம் கண்டு, காவல் துறையினர் அவர்கள் செல்வதற்கு அனுமதித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago