காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி கூறினார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைத் தடுக்க சுகாதாரம், வருவாய் மற்றும் உள்ளாட்சித் துறைஊழியர்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 81 கட்டுப்பாட்டுப் பகுதிகள் அமைக்கப்பட்டு, நோய் பரவல்தடுக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் 239 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன.அதேபோல, தனியார் மருத்துவமனைகளில் 180 படுக்கைகள் உள்ளன. மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. போதிய அளவு கையிருப்பு உள்ளது.
தினமும் 7 ஆயிரம் பேருக்குதடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.
கரோனா விதிகளைப் பின்பற்றாத 25 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும்17 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago