புதுச்சத்திரத்தில் உதவி ஆய்வா ளரை தாக்கியவர் குண்டர் சட்டத் தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த 1-ம் தேதி புதுச்சத்திரம் அருகே உள்ள சீனிவாசபுரம் குறுக்கு ரோட்டில் புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் போலீஸார் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் ஆலப்பாக்கம் குறவன் மேடு மாரியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த நிரபு (31) என்பவர் வந்துள்ளார். போலீஸார் நிறுத்தியதால் கோபமடைந்த அவர், உதவி ஆய்வாளரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி சென்றுள்ளார். உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் புகாரின் பேரில் புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் கவிதா இதுதொடர்பாக நிரபுவை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இவர்மீது புதுச்சத்திரம், திருப் பாதிரிப்புலியூர், நெல்லிக்குப்பம், சீர்காழி, மயிலாடுதுறை காவல்நிலையங்களில் 15 குற்ற வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் எஸ்பி அபிநவ் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி குண்டர் சட்டத்தில் நிரபுவை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் நேற்று கடலூர் மத்திய சிறையில் உள்ள நிரபுவிடம் உத்தரவு நகலை வழங் கினர்.
இவர்மீது காவல்நிலையங்களில் 15 குற்ற வழக்குகள் உள்ளன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago