பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 1,500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தினமும் சராசரியாக 50 பேருக்கு தொற்று உறுதியாகி வருகிறது. இன்றைய நிலையில் 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1,000 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 122 மையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகின்றன.
மாவட்டத்தில் இதுவரை 50,475 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 9 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. அடுத்த 2 நாட்களில் 12 ஆயிரம் தடுப்பூசிகள் வரவுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவமனையில் 270 மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இங்கு 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜனை சேமிக்கும் தொட்டி உள்ளது. இதில் தொடர்ந்து 100 சதவீதம் இருப்பு இருக்கும் வகையில் கண்காணிக்கப்படுகிறது.
இதேபோல் கரோனா சிகிச்சை அளிக்கப்படும் மற்ற இடங்களிலும் தேவையான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago