விருதுநகர் - மதுரை மாவட்ட எல்லைப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இந்த மலைப் பகுதியில் 2015-ல் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, அமாவாசை, பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் மட்டும் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மறு அறிவிப்பு வரும்வரை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகவும், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாலும், சதுரகிரி செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மறுஅறிவிப்பு வரும் வரை இத்தடை தொடரும்.
அதே நேரம், சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago