திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன் மகன் பாபு(27). திருச்சி காஜாமலை பகுதியைச் சேர்ந்தவர் சையது லத்தீப் மகன் சையது ஆசிக்(25). புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பணம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் ராஜ்குமார்(23). புதுக்கோட்டை மகாராஜ புரத்தைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது மகன் சல்மான்(21). குன்னவயலைச் சேர்ந்தவர் சி.மதி. இவர்கள் 5 பேரும் அரிவாள், கத்தி, நைலான் கயிறு, மிளகாய் பொடி போன்ற பொருட்களுடன் புதுக்கோட்டை பூசத்துறை வெள் ளாற்றங்கரையில் நேற்று முன்தினம் கூடியிருந்தனர்.
சட்ட விரோத செயலில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக வந்த புகாரின் பேரில் 5 பேர் மீதும் திருக்கோகர்ணம் போலீ ஸார் வழக்கு பதிவு செய்தனர். அதில், பாபு, சல்மான் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மற்றவர்களை இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் தலைமையிலான தனிப்படை யினர் தேடி வருகின்றனர்.இவர்கள் அனைவர் மீதும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங் களில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, திருட்டு போன்ற வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago