ஆரணி நகராட்சியில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத 4 கடைகளுக்கு நேற்று 'சீல்' வைக் கப்பட்டன.
தி.மலை மாவட்டம் ஆரணி நகராட்சி நிர்வாகம் மூலம் சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்த கடைகள் மூலமாக நகராட்சி நிர்வாகத்துக்கு ரூ.2 கோடி அளவுக்கு வாடகை பாக்கி உள்ள தாக கூறப்படுகிறது.
இதையடுத்து, நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகளை பட்டியலிட்டு, வாடகை வசூல் செய்யும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. கால அவகாசம் கொடுத்தும் வாடகை செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்' வைக்கப்படுகிறது.
அதன்படி, ஆரணி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள 4 கடைகளுக்கு நேற்று ‘சீல்' வைக்கப்பட்டன. இதற்கு கடை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, நீண்ட காலமாக வாடகை செலுத்தாததால் நடவடிக்கை எடுக்கப் படுகிறது என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago