வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கரோனா தொற்றுபாதிப்பால், அவரது அலுவலகத் தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நேற்று 301 பேர் பாதிக்கப்பட்டனர். தொற்று வேகமாக பரவி வருவதால் பரிசோதனையை மாவட்ட நிர்வாகம் அதிகரித் துள்ளது.
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், கரோனா தொற்றால் நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டார். இதை யடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பி-பிளாக் கட்டிடத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பூட்டப்பட்டது. அதேபோல், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத் திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப் பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலக இரண்டாவது மாடியில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அங்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் பூட்டப்பட்டது. வேலூர் மண்டித் தெருவில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வங்கியை மூட மாநகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago