திமிரி மற்றும் பள்ளிகொண்டாவில் உலக புத்தக தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திமிரி ஒன்றியத்தின் சார்பில் உலக புத்தக தின விழா நேற்று நடைபெற்றது. திமிரி வட்டார வள மையத்தில் புரவலர் செ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகர், வட்டாரக்கல்வி அலுவலர் கோ.முருகன், வட்டார வள மேற்பார்வையாளர் சுரேஷ் ஆகியோர் வாசிப்பின் மேன்மை குறித்து எடுத்துரைத்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர் வ.கும ரேசன், ஏ.ஹரிதாஸ், ஆசிரியர்கள் சே.சோழவேந்தன், சி.பாபு, எம்.விஜயபாஸ்கரன் உள்ளிட்டோர் எனக்குப் பிடித்த புத்தகம் என்ற தலைப்பில் புத்தக விமர்சனம் செய்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் பழனிவேல், அறிவியல் இயக்க வெளியீட்டு நூல்கள் குறித்துப் பேசினார். இந்த நிகழ்ச்சியை அறிவியல் இயக்கத்தலைவர் ஆசிரியர் லோகநாதன் ஒருங் கிணைத்தார். முடிவில், அறிவியல் இயக்க செயலாளர் ஆசிரியர் வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார்
பள்ளிகொண்டா
உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளிகொண்டா புனித தெரேசா அரசு நிதியுதவி உயர்நிலைப் பள்ளி நூலகத்துக்கு வேலூர் மாவட்டம் ரோட்டரி சங்கம் சார்பாக ரூ.14 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்கள் வழங்கப்பட்டன. வேலூர் ரோட்டரி மாவட்டத்தில் துணை ஆளுநர்களின் ஒருங் கிணைப்பாளர் சீனிவாசன் மற்றும் வேலூர் மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவர் ஜோசப் அன்னையா மற்றும் கோபி ஆகியோர் பள்ளியின் தாளாளர் அற்புதராஜ், தலைமை ஆசிரியர் பீட்டர் மேத்யூ ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago