நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா வைரஸ் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு சார்பில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களான ஏப்ரல் 23 மற்றும் 30-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பணிநாளாகவும், அதற்குப் பதிலாக ஏப்ரல் 25 மற்றும் மே 2-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு நாட்கள் முழு ஊரடங்கின் போது விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று பயன்பெறலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago