திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 491 பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி அருகே கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டதால் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.
திருநெலவேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனாபாதிப்பு எண்ணிக்கை மிகஅதிகமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுமுன்தினம் ஒருநாள் பாதிப்பு 489 ஆக இருந்த நிலையில் நேற்று புதிய உச்சமாக 491 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதில் மாநகர பகுதிகளில் 244 பேரும், புறநகர் பகுதிகளில் 247 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 20, மானூர்-24, நாங்குநேரி- 16, பாளையங்கோட்டை- 43, பாப்பாக்குடி- 27, ராதாபுரம்- 25, வள்ளியூர்- 42, சேரன்மகாதேவி- 23, களக்காடு- 27.
திருநெல்வேலி அருகே கல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், லேப்டெக்னீசியன் மற்றும் ஊழியர் என மொத்தம் 6 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாகஅறிவிக்கப்பட்டது. அங்கு கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாளையங்கோட்டை தெற்குபஜார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதிப்பு கண்டறியப்பட்ட 4 இடங்களை தடை செய்யப்பட்ட பகுதிகளாக மாநகராட்சி அறிவித்து, அங்கு அறிவிப்பு பதாகைகளை வைத்துள்ளது. தெற்குபஜார் சாலையில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 281 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.வட்டாரம் வாரிய பாதிப்பு எண்ணிக்கை விவரம்: தென்காசி- 55, சங்கரன்கோவில்- 45, கீழப்பாவூர்- 37, ஆலங்குளம்- 43,வாசுதேவநல்லூர்- 20, குருவிகுளம்- 21, கடையநல்லூர்- 13, மேலநீலிதநல்லூர்- 10, கடையம்- 12, செங்கோட்டை- 25.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பலனின்றி நேற்று ஒரேநாளில் 3 பெண்கள் உயிரிழந் தனர். இதனால் இதுவரை உயிரி ழந்தோர் எண்ணிக்கை 257 பேராக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19 ஆயிரத்தை கடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை கரோனா முதல் கட்ட தடுப்பூசியை 80,051 பேரும், இரண்டாம் கட்ட தடுப்பூசியை 12,405 பேரும் போட்டுள்ளனர். கரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 39,061 பேரிடமிருந்து ரூ.74.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
துறைமுக அலுவலகம் மூடல்
ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், தூத்துக்குடி வஉசி துறைமுக நிர்வாக அலுவலகம் மூடப்பட்டது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. துறைமுக அலுவலகம் வரும் 25-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். அலுவலர்கள், ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறைமுக நிர்வாக அலுவலகம் மூடப்பட்ட போதிலும் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மேலும் 354 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2,250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago