காரில் இருந்து ரூ.4 லட்சம் திருட்டு :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள நெரிஞ்சிக்குடி கிராமத் தைச் சேர்ந்தவர் ஆர்.சக்தி வேல்(35). ஒப்பந்ததாரரான இவர், நேற்று பொன்னமராவதியில் உள்ள ஒரு தேசியமய மாக்கப்பட்ட வங்கிக் கிளைக்கு சென்று, தனது கணக்கில் இருந்து ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு காரில் பேருந்து நிலையம் சென்றுள் ளார். அங்கு, காரிலேயே ரூ.4 லட்சத்தை வைத்துவிட்டு, ரூ.60 ஆயிரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அருகே உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வந்து பார்த்தபோது, காரின் முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு, காருக்குள் இருந்த ரூ.4 லட்சம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து பொன்னமராவதி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்