போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தடுப்பூசி :

கரூரில் போக்குவரத்துக்கழக ஊழியர் களுக்கு நேற்று கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கரூர் மாவட்டத்துக்கு 1,940 கோவி ஷீல்டு தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தன. இதையடுத்து, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கரூர் கஸ்தூரிபாய் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், குளித்தலை அரசு மருத்துவ மனை மற்றும் குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 4 மையங்களுக்கு தலா 250 தடுப்பூசிகள் அனுப்பப் பட்டன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குளித்தலை அரசு மருத்துவமனையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளும், கரூர் கஸ்தூரிபாய் மற்றும் குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2-ம் கட்ட மற்றும் முதற்கட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளும் நேற்று போடப்பட் டன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக கரூர் மண்டல அலுவலகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்து நர்கள் உள்ளிட்ட போக்கு வரத்துக்கழக ஊழியர்களுக்கு நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்