தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளன்று கடைபிடிக்க வேண்டிய கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோச னைக் கூட்டம் பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கடபிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து ஆட்சியர் தெரி வித்தது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர்(தனி) தொகுதிக்கு குரும்பலூரிலுள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் தொகுதிக்கு வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் மே 2-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேசைகளும், அஞ்சல் வாக்குகள் எண்ணுவதற்காக 4 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்துக்கு வரும் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் அனைவரும் கரோனா நெகடிவ் என சான்று பெற்றிருந்தால் மட்டுமே, வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைய அடையாள அட்டை வழங்கப்படும். முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்து வர வேண்டும்.
செல்போன் மற்றும் கூர்மையான பொருட்கள் எடுத்துவர அனுமதி யில்லை. முகவர்கள் எவரே னும் விதிமுறைகளை மீறி நடந்தால் உடனடியாக வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேற்றப் படுவார்கள்.
வாக்கு எண்ணும் கூடம் அனைத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தால் இணையதளம் மூலம் நேரடி யாக கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், பெரம் பலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.இ.பத்மஜா, குன்னம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எஸ்.சங்கர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago