திருவண்ணாமலையில் உள்ள கடைகளில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.
கரோனா தொற்று விதிகளை பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடைகளில் பணி செய்பவர்கள், உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூகஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள் ளது. இந்நிலையில், தி.மலை யில் உள்ள நகைக்கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட கடைகளில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், சிலர் முகக்கவசம் அணியாமலும் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், முகக்கவசம் அணியாமல் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago